மாவட்ட கலை திருவிழா

ராமநாதபுரம் அருகே நடந்த மாவட்ட கலை திருவிழாவில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட கலை திருவிழா
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணை தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் கே.டி.பிரபாகரன், மண்டபம் ஒன்றிய தலைவர் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன்,

ஊராட்சி மன்றத் தலைவர்கள் முத்தமிழ் செல்வி பூரணவேல் (வாலாந்த ரவை), சந்திரசேகர் (வெள் ளிடை), தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com