நகர் மன்ற அவசர கூட்டம்

ராமநாதபுரம் நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.
ராமநாதபுரம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர் இசக்கி யம்மாள் அவசர தீர்மானங்களை வாசித்தார். ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வராக தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து நகர்மன்ற தலைவர் கார் மேகத்திடம் எடுத்துரைத்த னர். அவர் சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் உடனடி யாக குறைபாடு களை சரி செய்ய வேண்டுமாய் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com