சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

சாயல்குடி அருகே சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது. விழாஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
Published on

சாயல்குடி

சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காரண மறவர் சங்கத் தலைவர் சிதம்பர நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், பொருளாளர் மூக்காண்டி, கூட்டமைப்பு தலைவர் சுந்தர கணபதி, ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி சந்தன மாரியம்மன், செல்வவிநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சநேயர், கருப்பசாமி, மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சிறுமிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், குதிரை எடுப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறைவு நாளான நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று தெற்கு நரிப்பையூர் கடலில் கரைத்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலமுருகன் விழாஏற்பாடுகளை பாலாஜி, மலைக்கண்ணன், இளங்கோ, சித்தார்த்தையன், ஆனந்த், பொறியாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com