நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளை

கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளை
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுஇரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

இன்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார்.

அப்போது நிதி நிறுவன த்தின் கதவு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதையடுத்து அவர் நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்ககப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்தை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நிதி நிறுவன த்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com