தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை, ஆய்வகம் கட்ட பூமிபூஜை

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை, ஆய்வகம் கட்ட பூமிபூஜை நடந்தது.இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
பணிமனை மற்றும் ஆய்வக கட்டுமான பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
பணிமனை மற்றும் ஆய்வக கட்டுமான பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
Published on

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஆயத்த இழைப்பு சட்டக பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், தி.மு.க. மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, செயற்பொறியாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com