ரெயில் நிலையத்தில் காட்சி பொருளான பேட்டரி கார்

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் காட்சி பொருளாக உள்ளது.
பேட்டரி கார்
பேட்டரி கார்
Published on

ராமநாதபுரம்

புனித ஆன்மிக தலமான ராமேசுவரத்துக்கு ராமநாதபுரம் வழியாக தினந்தோறும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதுதவிர மதுரை, சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும்  திருப்பதி, வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துக்கு தினந்தோறும் நு£ற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 

இவர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ‘பேட்டரி கார்’ வாங்கப்பட்டது. ஆனால் இந்த கார் கடந்த 2 ஆண்டாக பயன்பாடு இல்லாமல் பிளாட்பாரத்தில் அப்படியே காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. 

பிளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக பேட்டரி காரை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com