கூடுதல் கண்காணிப்பாளர் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனம்
நியமனம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சட்டம், ஒழுங்கு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவா் ஜெய்சிங். இவா் சில நாட்களுக்கு முன்பு மதுரை நகருக்கு இடமாற்றப்பட்டாா். அவருக்கு பதிலாக ராமநாத புரம் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.  

இந்தநிலையில் திருச்சி மாநகா் துணை ஆணையராக இருந்த பாஸ்கரன் பதவி உயா்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட சைபா்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். 

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த திருமலை பரமக்குடி சரக துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். 

அவருக்கு பதிலாக சிவகங்கையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஆய்வாளராக இருந்த உமாமகேஸ்வரன் பதவி உயா்வு பெற்று ராமநாதபுரம் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com