2 வேன் கிளீனர் பணியிடத்திற்கு 119 பேர் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்ட செய்தி-மக்கள்தொடர் துறையில் 2 வேன் கிளீனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 119 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
2 வேன் கிளீனர் பணியிடத்திற்கு  119 பேர் விண்ணப்பம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள்தொடர் துறையில் 2 வாகன சீராளர் பணியிடம் காலியாக உள்ளது.

ஆண், பெண் இருபாலர் என மொத்தம் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்று எஸ்.சி., (முன்னுரிமையற்றவர்) 18 முதல் 37 வயதும், பி.சி., (முன்னுரிமை பெற்றவர்) 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேர்முகதேர்வு நடந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர்.

பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி, ஆதார் அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

எம்.எஸ்.சி., பி.இ., மெக்கானிக் படித்த டிப்ளமோ, பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com