இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

தொண்டி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் உள்பட  2 பேர் தற்கொலை
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தைச் சேர்ந்தவர் தூய மணி (வயது65), மீனவர் இவரது மகள் தனலட்சுமி (28). இவர் தொண்டியில் செயல் பட்டு வரும் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் தட்டச்சு செய்பவராக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தனலட்சுமின் தந்தை தூயமணி எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தொண்டியில் நேற்று முன்தினம் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த தொண்டீஸ்வ ரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் அதே பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண் தனலெட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com