

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நகர் சோழியக்குடி ஆகிய பகுதி களைச்சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகளை கரையில் இழுத்து வந்து மராமத்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் தொண்டி மீன் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு வரும் இரால் வரத்து இல்லாமல் போனது. மேலும் ஆழ் கடல் மீன்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அசைவப்பிரியர் கள் ஞாயிற்றுக்கிழமை விடு முறையில் சாப்பிட முடியா மல் ஏமாற்றமடைந்தனர்.
ஆழ்கடல் மீன்கள் ஏதும் கிடைக்காததால் தொண்டி மீன் மார்க்கெட்டிற்கு தூண் டில் மீன்கள், நாட்டுப்படகில் பிடிக்கும் மீன்களான வாடையா மீன், முரல்மீன், கட்டா, பாறை, கலிங்க முரல், கொடுவா மீன், விலை மீன் மற்றும் வலையில் பிடிக்கும் பண்ணை இரால்கள் விற் பனைக்கு வந்தது. அசைவப் பிரியர்கள் தாங்கள் விரும் பிய மீன்களை வாங்க முடியாமல் விற்பனைக்கு வந்த மீன்களை வாங்கிச் சென்றனர்.