வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி

ராமநாதபுரத்தில் வனத்துறை சார்பில் வருகிற 2-ந்தேதி ஓவியப்போட்டி நடக்கிறது.
ஓவியப்போட்டி
ஓவியப்போட்டி
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வன உயிரின காப்பாளார் பகான் ஜக்தீஷ் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப்போட்டி வருகிற 2ந்தேதி நடைபெறுகிறது. இதில்  ராமநாதபுரம் மாவட்டத்தில்  உள்ள இயற்கை  ஆர்வலர்கள், தன்னார்வலர்களுக்கு புகைப்பட போட்டியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி மற்றும் புகைப்பட போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில், ராமநாதபுரத்தில் காணப்படும் நீர்நிலைகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்போரின் கல்வித்தகுதி, முகவரி, கைப்பேசி எண்களை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். தெளிவான முகவரி இல்லாத படங்கள் நிராகரிக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் (மொபைல் எண் 94424 07750), ராமநாதபுரம் வனஉயிரின வனச்சரக அலுவலர் ஜெபஸ் (மொபைல் எண்- 90250 56009) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com