50 ஆண்டுகளாக தூர் வாரப்படாத கண்மாய்

தொண்டி அருகே 50 ஆண்டுகளாக கண்மாய் தூர் வாரப்படாமல் உள்ளது.
அரசுக்கு கோரிக்கை
அரசுக்கு கோரிக்கை
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட பெருமானேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாய் சுமார் 50 ஆண்டுகளாகவே தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது புட்புதர் மண்டி காணப்படுகிறது. 

இந்த கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் போதிய நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இந்த கண்மாயை நம்பி இப்பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பாசனம் செய்யப்படுகிறது. 

தூர்வாரப்படாமல் தேங்கிய தண்ணீரை ஆடு, மாடு குடிப்பதற்குகூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் இக்கண்மாயை தூர்வாரி சேதமடைந்த மடைகளுக்குப் பதிலாக புதிதாக மடைகள் கட்டி, கரைகளை பலப்படுத்த இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com