வெறிநாய்கள் தொல்லை அதிகரிப்பு

கீழக்கரையில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
வெறிநாய்கள்
வெறிநாய்கள்
Published on

கீழக்கரை

கீழக்கரை நகராட்சி பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவசர காலங்களில் வெளியே செல்ல அச்சம் அடைகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் கீழக்கரையில் வெறிநாய்கள் ஏராளமானோரை கடித்து ‘பதம்‘ பார்த்தது.  இதையடுத்து நாய்கள் பிடிக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. 

வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு நாய் குறுக்கே பாய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவசர  காலங்களில் வெளியே செல்ல  அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரை மக்கள் டீம் அமைப்பாளர் காதர் கூறுகையில்,  பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ரேபீஸ் நோய் பரப்பும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்  என்றார்.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com