தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி  தேர்வு
தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள ராமநாத புரம், கீழக்கரை, பரமக் குடி, ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் பெரும்பான் மையான இடத்தில் வெற்றி பெற்றனர். இதனால் 4 நகராட்சிகளும் தி.மு.க. வசமானது.

நகராட்சி தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 நகராட்சியிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தி.மு.க. தலைமை அறிவித்து இருந்தது.

அதன்படி கீழக்கரை நகராட்சி தலைவராக செகானாஸ் ஆபிதா என்பவரும், பரமக்குடி நகராட்சி தலைவராக சேது கருணாநிதியும், ராமேசுவரம் நகராட்சி தலைவராக நாசர்கானும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஆணையாளர் சந்திரா முன்னிலையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கார்மேகம் போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் அய்யனார் என்பவர் போட்டியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 33 வாக்குகளில் கார்மேகம் 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அய்யனார் 9 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com