அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி பேரணி

கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது. கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற ேபாது எடுத்த படம்.
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற ேபாது எடுத்த படம்.
Published on

விழுப்புரம்:

திண்டிவனம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெலாகுப்பம் ஊராட்சி, வேம்பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைய பள்ளியில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனையுடன், "நம் பள்ளி நம் பெருமை" மற்றும் பள்ளி வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்தும், கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்து கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.

பேரணியை ஊராட்சிமன்ற தலைவர், உயர்நீதி மன்ற வக்கீல் பூங்கா பாக்யராஜ் கலந்துகொண்டார், நடுநிலைய பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பண்டராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com