செங்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர்

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா பண்பொழி-வடகரை சாலையில் கரிசல்குடியிருப்பு விலக்கில் உள்ள ஆற்று பாலத்தில் 3 கண்வாய்கள் உள்ளது. இதில் ஒரு கண்வாய் பல நாட்களாக அடைத்து சீரமைக்கப்படாமல் இருந்து வருவதாகவும், அதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நெற் பயிர்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com