பரமத்திவேலூரில் மழை

பரமத்திவேலூரில் விடிய விடிய லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
பரமத்திவேலூரில் மழை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோளசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. விடிய விடிய லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

தொடர்ந்து2 நாட்களாக மழை பெய்து வருவதால் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. மழையின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இரவில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com