அம்பையில் பந்தயத்தின்போது மாட்டு வண்டி கவிழ்ந்து வீரர் சாவு

அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றதுபந்தயம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தது
அம்பையில் பந்தயத்தின்போது மாட்டு வண்டி கவிழ்ந்து  வீரர் சாவு
Published on

கல்லிடைக்குறிச்சி:

அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து மாட்டுவண்டி வீரர்கள் கலந்துகொண்டனர்.

அம்பையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி, காக்கநல்லூர் விலக்கு வரை மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த பந்தயத்தில் நடுக்கல்லூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் (வயது 42) என்ற வீரரும் கலந்து கொண்டு வரிசையில் நின்றார்.

பந்தயம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே மகாராஜனின் மாட்டு வண்டி நிலைதடுமாறியது. இதில் அவர் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் தறிக்கட்டு ஓடிய காளைகள் அவர் மீது ஏறி ஓடியது. உடனே அவரை மீட்டு அம்பை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com