முந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

கந்தர்வக்கோட்டை அருகேமுந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

 கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை கிராமத்தில் அற்புதபுரம் பெரியசாமிக்கு சொந்தமான முந்திரி காட்டில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து சென்ற கந்தர்வ கோட்டை போலீ சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மஞ்ச ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com