மாணவர்கள் இருக்கை வழங்கும் விழா

கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கை வழங்கும் விழா நடைபெற்றதுசுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
மாணவர்கள் இருக்கை வழங்கும் விழா
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இருக்சுகை வழங்கும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு இருக்கைகள் வழங்கினார். அதன் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிடம் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com