புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா நடைபெற்றதுபுதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

முதல்நாள் வகுப்பிற்கு வந்துள்ள மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களை பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சி.இ.ஓ. காவியா மூர்த்தி மற்றும் பேராசிரியர் அபிராமி கருப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மனசுதிட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.

விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி மற்றும் மேல்நிலைவகுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, ஜெயசுதா, தனம்பாலமுருகன், பால்ராஜ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், மேலாளர் ராஜா மற்றும் திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆசிரியர் கனியன் செல்வராஜ் வரவேற்றார். விழாவினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com