

ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள சிட்டங்காட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குறுங்காடு திட்டத்தை, மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் குறுங்காடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எந்த மரக்கன்றுகளும் பழுதாகாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைத்தும் மரமாக வேண்டும், நன்கு வளர்ந்து மரமாகி பயன்தர மேலும் என்னென்ன, செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கேட்டறிந்ததோடு, தேவையான அறிவுரையும் அவர் வழங்கினார். திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, அத்திட்டத்திற்கான பணிகள் செவ்வனே நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்து வரும், அமைச்சர் மெய்யநாதனின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.