மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுது

ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுதானது2 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுது
Published on

வேலாயுதம்பாளையம்,

ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காய் சோளிபாளையம் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில்வே பாதையில் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று மாலை 6:45 மணி அளவில்பயணிகள் ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற பின் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் மாங்கா சோளிபாளையதிலிருந்து கரூர், வேலாயும்பாளையம், தளவா பாளையம் , சேலம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட் பழுதடைந்தது தொடர்பாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் ரயில்வே கேட் ஊழியர் தகவல் கூறிய பின் ரயில்வே கேட் பழுதுபார்க்கும் ரயில்வே பணியாளர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மாங்கா சோளி பாளையம் ரயில்வே கேட்டை,இரவு 9.30மணி அளவில் சரி செய்யப்பட்டது.அதன் பின் அங்கு வரிசையாக நின்றிருந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடிந்தது. சுமார் 2 .30மணி நேரம் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com