கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டதுநெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார்
கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு ஊராட்சியில் உள்ள குரும்பிவயலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரு கீழத்தெரு ஊராட்சி மன்ற தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன், அரசு ஒப்பந்ததாரரும் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளருமான கருக்காகுறிச்சி பரிமளம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ. முத்துராஜாவிற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் அப்பகுதி கிராமமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. முத்துராஜா வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com