ஆலங்குடியில் அய்யப்ப சுவாமி வீதியுலா

திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர் ஆலங்குடியில் அய்யப்ப சுவாமி வீதியுலா நடைபெற்றது
ஆலங்குடியில் அய்யப்ப சுவாமி வீதியுலா
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை, புரட்டாசி, சித்திரை மாதங்களில் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொள்வார்கள். கார்த்திகை மாதத்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தர்கள் சார்பில் அய்யப்பன் வீதி உலா நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளம் மற்றும் வான வேடிக்கை முழங்க அய்யப்பன் வீதியுலா நடைபெற்றது. அய்யப்பன் கோயிலில் புறப்பட்ட இந்த வீதி உலாவானது சந்தைப்பேட்டை பேருந்து நிலையம், அரசமரம் பஸ்ஸ்டாப், வடகாடு முக்கம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அய்யப்பனின் வீதியுலா நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி கா வல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com