4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம்

அறந்தாங்கியில் 4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்றை போலீசார் தடுத்து நிறுத்தினர் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்
4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம்
Published on

புதுக்கோட்டை,

அறந்தாங்கி எல் என் புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் ரீக்கோ காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com