புட்டு வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புட்டு வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்கள் புட்டு வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு தருணிதரன் (16) என்ற மகனும், ரூபவர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் சதீஷ் சாலை விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த சில தினங்களாக அவருக்கு கடுமையான தலைவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரவு, சதீஷ் வீட்டுக்கு வெளியே கட்டி லில் படுத்து தூங்கினார். ராஜேஸ்வரியும், குழந்தை களும் வீட்டுக்குள் படுத்துக்கொண்டனர். அதிகாலை ராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது, சதீஷ் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலை யில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த ராஜேஸ்வரி கதறி துடித்தார். பின்னர் இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com