பல்லடம் பெரியார் நகரில் சமூக விரோத செயல்களை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அடிக்கடி வடமாநில வாலிபர்கள் மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக புகார்.
பல்லடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி
பல்லடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி
Published on

பல்லடம் :

பல்லடம்- மாணிக்காபு–ரம் ரோட்டில் அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில திருநங்கைகள் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பகுதியில் அடிக்கடி வடமாநில வாலிபர்கள், மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com