கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 237 மனுக்களை கலெக்டரிடம் வழங்கி னார்கள்.மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதி யான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 237 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பாகலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாலூர் மெயின் ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரையில் 300 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பாகலூர் ஊராட்சி பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com