கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கொடுத்தனர். மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர்  ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது)  வேடியப்பன் ஆகியோர் உள்ளனர்.

Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலை–யில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com