நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய போது எடுத்த படம்.
மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.

இதில் மாநகர பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தில் 3-வது புதன்கிழமையான இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராமானோர்கள் கமிஷனர் அவினாஷ்குமாரிடம் நேரடியாக மனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்து 15 நாட்களில் தீர்வு காணாத மனுக்களுக்கு மீண்டும் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.

இன்று இடப்பிரச்சினை, அடி தடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் மனுகொடுத்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தினார்.

முகாமில் மேற்குமண்டல துணை கமிஷனர் சரவணகுமார், கிழக்கு மண்டல துணைகமிஷனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com