உடன்குடி சந்தையடிதெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும். திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உடன்குடி சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும் காட்சி.
உடன்குடி சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும் காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும். நெல்லை இருந்து வரும் பஸ்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள், உடன்குடி பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் ஆகிய 3 பஸ்களும் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் நின்று பயணிகளை இறக்குவதாலும், ஏற்றுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அந்த இடத்தில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும்.

மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். இப்படி செய்தால் சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். 

X

Maalai Malar
www.maalaimalar.com