கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறதுநுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை
Published on

கோபி:

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியை தொட்டது. இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 772 கன கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடுவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

இதையொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பார்த்து ரசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com