மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கல்

7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவியை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவியை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
Published on

பூதலூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வினோபாஜியின் 41-ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 9 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.95 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் உதவி வழங்கினார்.

மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அகரப்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி, ஏழை பெண்களுக்கு வேஷ்டி- சேலை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகளும் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ஜீவா சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்திற்குள் வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com