கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்

அம்மாபேட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
Published on

 அம்மாபேட்டை:

அம்மாபேட்டை திருநெறி தமிழ் மன்றம் நிர்வாகி ருக்மணிஆச்சி நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாபேட்டை அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், திருநெறி தமிழ் மன்ற நிர்வாகி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த ஏராளமான நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர் சித்ரா, கிராம செவிலியர்கள் சரளா, சர்மிளா, வினோதினி, மஞ்சுளா. கண்ணையன், கண்ணன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்ஏற்பாடுகளை திருநெறி தமிழ்மன்றம் நிர்வாகி ராமநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com