பொள்ளாச்சியில் வாடகை வீட்டில் விபசாரம்

பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது விபசார தொழில் செய்த புரோக்கர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் வாடகை வீட்டில் விபசாரம்
Published on

கோவை,

பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு அழகியை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. போலீசார் அழகியை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் சூலூர் அருகே உள்ள தோட்டத்து சாலையை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 30 வயது அழகியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com