சிலம்ப போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர்.
பரிசு வழங்கியபோது எடுத்த படம்.
பரிசு வழங்கியபோது எடுத்த படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு ஆயுதக் கலைகள் சார்ந்த போட்டி நடைபெற்றது. பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 சிலம்பாட்ட பயிற்சி அணியினர் பங்கேற்றனர்.

தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். அவர்களுக்கு டி.எஸ்.பி. கீதா பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com