உடன்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

உடன்குடியில் தனியார் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில் படித்த பட்டதாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
வேலை வாய்ப்பு முகாமில் பணி ஆணையை வழங்கிய காட்சி.
வேலை வாய்ப்பு முகாமில் பணி ஆணையை வழங்கிய காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி முன்பு தனியார் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி மன்றத் தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, தி.மு.க. வர்த்தகஅணி துணை அமைப்பாளர் ரவி, உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, வார்டு கவுன்சிலர்கள்முகம்மது ஆபித், பாலாஜி, பசீர், பிரதீப் கண்ணன், அன்புராணி, சிவா, சரஸ்வதி, மும்தாஜ் பேகம், ராஜேந்திரன், சாரதா, சபானாதமீம், சரஸ்வதி பங்காளன், வணிகர்கள் சங்கத்தலைவர் அம்புரோஸ் தி.மு.க. வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் படித்த பட்டதாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். பலருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com