மனைவி, மகன்களை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை

வங்கி அதிகாரி மணிகண்டனுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மனைவி, மகன்களுடன் அதிகாரி மணிகண்டன்
மனைவி, மகன்களுடன் அதிகாரி மணிகண்டன்
Published on

சென்னை:

சென்னை பெருங்குடி பகுதியில் கடன் தொல்லை காரணமாக தனியார் வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் திணறிய வங்கி அதிகாரி மணிகண்டன், தன் மனைவி பிரியா, மகன்கள் தரன் மற்றும் தாகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வங்கி அதிகாரியான மணிகண்டன் யார், யாரிடம் கடன் வாங்கியிருந்தார்? கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com