சேலம் மத்திய சிறையில் 2-வது நாளாக கைதி உண்ணாவிரதம்

2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மத்திய சிறையில் 2-வது நாளாக கைதி உண்ணாவிரதம்
Published on

சேலம்:

பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரி ராஜன் (வயது 28), இவர் சென்னையில் உள்ள ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கையாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அவருக்கு படிப்பதற்காக வரும் புத்தகங்களை சமீப காலமாக அதிகாரிகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த சபரி ராஜன் நேற்று உண்ணாவிரத்தை தொடங்கினார். 2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com