கோவையில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை

துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
கோவையில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கோவை,

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சசிமோகன். இவரது மனைவி துர்கா (வயது 25). இவர்கள் 2 பேரும் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது துர்கா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பகாலம் என்பதால் சசிமோகன், துர்காவை அவரது தாயார் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக வேலைப்பளு மற்றும் கர்ப்ப காலத்தில் கணவர் தன்னுடன் இல்லாதது ஆகிய காரணங்களால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அவரது தாயார் அரிசி மண்டிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த துர்கா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாயார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. 3 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com