கே.டி.சி.நகரில் பிரசன்ன விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

வருசாபிஷேகத்தை தொடர்ந்து அனைத்து வகை திரவியங்களினாலும் அபிஷேகம் நடந்தது. வருசாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு தோற்றத்தில் பிரசன்ன விநாயகர்.
சிறப்பு தோற்றத்தில் பிரசன்ன விநாயகர்.
Published on

நெல்லை:

நெல்லை கே.டி.சி. நகரில் பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10-ந்தேதி வருசாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி காைல விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து வகை திரவியங்களினாலும் அபிஷேகம் நடந்தது. விநாயகர், மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com