பவர் டேபிள் கட்டண உயர்வு 2வது கட்ட பேச்சுவார்த்தை- 20ந்தேதி நடக்கிறது

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்,நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 17, 18-ந்தேதிகளில் திருப்பூரில் ஆடை உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடைகள் தைத்துக்கொடுக்கின்றன. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), தையல் நிலைய உரிமையாளர் சங்கம் (பவர்டேபிள் சங்கம்) பேச்சுவார்த்தை  நடத்தி பவர்டேபிள் கட்டணம் நிர்ணயிக்கின்றன. 

அந்தவகையில் இரு சங்கங்களிடையே பவர்டேபிள் கட்டண உயர்வுக்கான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

கடந்த டிசம்பர் 23-ந்தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதல் ஆண்டில் 30 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 வீதம் என 4  ஆண்டுகளுக்கு மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 17, 18-ந்தேதிகளில் திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால் வருகிற 20-ந்தேதி மாலை 4:30 மணிக்கு, ‘சைமா’ அரங்கில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com