மின் சிக்கன வார விழா பேரணி

இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மின் சிக்கன வார விழா பேரணி
Published on

பல்லடம் :

பல்லடத்தில், மின் சிக்கன வார விழாவைநொட்டி பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் தலைமையில், மின்வாரிய பொறியாளர்கள், மற்றும் அலுவலர்கள்,போர்மென்கள்,லைன் மேன்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை,பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மின் சிக்கனம் குறித்து விளக்கிப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரத்தினகுமார், திருஞானசம்பந்தர், உதவிப் பொறியாளர்கள் தண்டபாணி, கார்த்திகேயன்,லதா, கவிதா, மற்றும் பல்லடம் நகர மின் உதவிப் பொறியாளர்கள் தங்கராஜ், வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com