பூதலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பூதலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளுர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com