கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடைபெற்றது.அம்பாள் குருநாதர் மற்றும் உற்சவர் அம்பாள் குருநாதருக்கு தீபங்கள் ஏற்றி சோடனை தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை நடைபெற்றது. 4.35 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் உற்சவர் அம்பாள் குருநாதருக்கும் 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் போன்ற வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றி சோடனை தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மாரியப்பன், முருகன், பாலு, துவரகநாதன், மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com