தாம்பரத்தில் முதுகலை மருத்துவர்கள் உண்ணாவிரதம்

போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தில் முதுகலை மருத்துவர்கள் உண்ணாவிரதம்
Published on

சென்னை, அக். 15-

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இளம் மருத்துவர் சங்கம் நாடு முழுவதும் இன்று உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கங்களில் இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முதுகலை மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கு ஐ.எம்.ஏ. தமிழ் நாடு மாநில தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com