அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் வருகிற 12-ந் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.ஓய்வூதியர்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.
அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

அஞ்சல் துறை சார்பில், கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- கிருஷ்ணகிரியில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் வருகிற 12-ந் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.

அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் புகார்களை பென்சன் அதாலத் என்று தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் துறை கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி 635 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஓய்வூதியர்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழுமையான விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com