பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தீவிரம்

பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தீவிரம்
Published on

பல்லடம் :

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ரூ. 1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல்லடம் வட்டாரத்தில் மொத்தம் 83,620 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் சர்க்கரை கார்டுகள் 3,200 தவிர்த்து 80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து,கூட்டுறவுத் துறை சங்க கள அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:-பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி நேற்று முன் தினம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள். டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. தினமும் 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com