நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சரவணன் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடந்த போது எடுத்த படம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சரவணன் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடந்த போது எடுத்த படம்
Published on

நெல்லை:

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது.

மாநகராட்சி அலுவலகம்

இதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி நுழைவு வாயிலில் 5 பானை கள் வைத்து தூய்மை பணி யாளர்கள், அலுவலக ஊழி யர்கள் பொங்கலிட்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியா ளர்கள் மற்றும் கவுன்சி லர்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

கலைநிகழ்ச்சிகள்

இதனை தொடர்ந்து சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்ட பரதம், சிலம்பம் உள்ளிட்ட பாரம் பரிய கண்கவர் கலைநிகழ்ச்சி களும் நடை பெற்றது.

பொங்கல் விழாவின் முடிவில் பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்க ளுக்கு கரும்பு, பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த பண்டிகை கொண் டாட்டத்தின் போது செண்டை மேளம் முழங்கப் பட்டது. அப்போது மேலப் பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் அதிகாரி கள் செண்டை மேளம் இசைத்தனர். உற்சாக மிகுதி யில் சுகாதார அலுவலர் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் நடனம் ஆடினர்.

விழாவில் நகர்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் சந்திரசேகர், கிட்டு, அமுதா, முத்துலட்சுமி, உலகநாதன், ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com